BREAKING NEWS

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மயிலாடுதுறையில் தொழிலாளர்கள் வர்க்கத்தினருக்கு 8 மணி நேரம் வேலை பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் JAC அமைப்பின் சார்பாக இன்று மே தின பேரனி நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணி.

AITUC மாநில துணை செயலாளர் செல்வராஜ் தலைமையில் வண்டி பேட்டையில் பேரணி துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக விஜயா தியேட்டர் அருகில் முடிவுத்தது.முடிவில் CPI மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும், AITUC மாநில செயலாளர் சந்திரகுமார் பேரணியை வாழ்த்தி பேசினார்கள் இது போல் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 45 இயக்கங்கள் இணைந்த JAC அமைப்பின் சார்பில் மேதின பேரனி TELC பள்ளியிலிருந்து CITU மாவட்ட தலைவர் கலைசெல்வன் தலைமையில் துவங்கி No.2 ரோடு வழியாக சின்ன கடைத்தெருவில் முடிவடைந்தது.

அங்கு நடைபெற்ற மே தின பொது கூட்டத்திற்கு JAC தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.தமிழக விவசாய சங்க மாநில பொதுசெயலாளர் சாமி நடராஜன் சிறப்புரை ஆற்றினார்.பொது கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் JAC பொது செயலாளர் இராயர் மற்றும் 45க்கு மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS