BREAKING NEWS

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை, தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது, தற்போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுப்பராயன் திருப்பூரிலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அவர் டெல்லிக்கு செல்ல தேவையில்லை இதுதான் நமது தீர்ப்பு என பேசி – கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு.

அதிமுக சார்பில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட டிஜிபுதூர் நால்ரோடு, ஏலூர், டி.என்.பாளையம், வாணிபுத்தூர், பங்களாபுதூர், துறையம்பாளையம், கள்ளிப்பட்டி, பெருமுகை உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பிரச்சாரத்தின் போது தற்போது உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கோபி தொகுதிக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளையும் கொண்டு வரவில்லை எனவும்

ஐந்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுப்ராயனை ஒரு நாள் கூட தொகுதியில் பார்த்தது கிடையாது, அவர் தற்போது யாரையும் சந்திக்காமல் வெற்றி பெறுவேன் என கூறி வருகிறார், கடந்த முறை பொதுமக்கள் ஏமாந்து சுப்ராயனுக்கு வாக்களித்து விட்டனர்,

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை, தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது, தற்போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகள் போட்டியிடும் சுப்பராயன் திருப்பூரிலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதான் அவர் டெல்லிக்கு செல்ல தேவையில்லை இதுதான் நமது தீர்ப்பு,

அதிமுக சார்பில் போட்டியிடும் அருணாச்சலத்தை வெற்றி பெற செய்தால் நாடாளுமன்றத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் அனைத்தையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பேசி பொதுமக்களிடையே திறந்தவெளி வாகனத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குகள் சேகரித்தார் ..

CATEGORIES
TAGS