இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலார்ட்டு கொடுத்துள்ள நிலையில் இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்பக வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
மலை மாவட்டம் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் துவங்கும் தென்மேற்கு பருவமழை நவம்பர் மாதம் வரை பெய்யும்.
இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் அபாயம் உள்ள நிலையில் வரும் 18 19 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த மூன்று நாட்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் மழையை சமாளிக்க தீயணைப்பு துறை, மின்சாரத்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.