இறுதி கட்ட பிரச்சாரத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எல்.முருகன் உதகை ஏடிசி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றுவதே நோக்கம், தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணையிக்கப்படும், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும், தேயிலைக்கு அடுத்தப்படியாக மூலிகை விவசாயம் மேற்கொள்ளப்படும், உதகையை சினிமா நகரமாக மாற்றப்படும், மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பது யாரும் நிச்சயிக்கப்பட்டது, படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், சிலிண்டர் இல்லாத மக்களுக்கு இணைப்புகள் வழங்கப்படும், உதகையில் 600 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டி கொடுக்கப்பட்டது பிரதமர் மோடி என்றும், விவசாயிகளின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், மேட்டுப்பாளையம் சாலையை இரு வழி சாலையாக மாற்றப்படும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தப்படும் என்றார்.
மோடி ஜீயா, 2 ஜீ யா என்றும் வரும் 19ம் தேதி பாஜகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர், உதகை மார்க்கெட் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றார்.