BREAKING NEWS

இஸ்லாமியர்களால் உலகெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களால் உலகெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களால் உலகெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ‘ஹஜ்பெருநாள்’ ‘தியாக திருநாள்’ எனவும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத்.இறைவனின் தூதர்களால் இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு , இன்றைய இராக்கில் வாழ்ந்துவந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை ஆகவே இவரின் இரண்டாவது மனைவி ‘ஹாஜரா ‘மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது பின்னர் அக்குழந்தைக்கு’ இஸ்மாயில்’ என பெயரிடப்பட்டுள்ளது அந்த குழந்தையின் வழிவந்தவர்களே இன்றைய அரேபியர்கள் இதன் மூலம் இஸ்மாயில் குழந்தை பருவத்தை எட்டியிருந்தபொழுது அவரை தனக்கு பலியிடுமாறு அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டார் இதை பற்றிய இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம் அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது , இறைத்தூதரை அனுப்பி இறைவன் அவர் பலியிடுவதை தடுத்தார் அதற்கு பதிலாக ஆட்டை இறக்கிவைத்த இறைவன் இஸ்மாயிலுக்கு பதிலாக அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார்.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் தியாக திருநாள் கொண்டாடப்படுகிறது இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

 

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து தொழுகைக்கூடங்களில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளில் தான் நடத்தப்படுகின்றனர். இதில் முக்கியமான ஒன்று தொழுகை இண்டாவதாக , பலியிடல் இந்த பலியிடலில் பக்ரீத் தினத்தன்று இஸ்லாமியர்கள் அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர்.

பின்னர் அதன் இறைச்சியை மூன்று சமபங்குகளால் பிரித்து ஒரு பங்கை அண்டைவீட்டார் மற்றும் உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைஎளிய மக்களுக்கும் மூன்றாவது பங்கை தங்களின் தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும் குறைந்தபட்சம் ஒரு வயது முடிந்ததாகவும் பார்த்துக்கொள்ளப்படுகின்றது.

இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12 வது மாதமான துல்ஹஜ் மாதம் 10 நாள் கொண்டாடப்படுகிறது . இறைவன் கட்டளைக்காக மகனை பலியிட துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது .

அன்பை பகிர்ந்துகொள்வது, நன்றி பகிர்வது ,மனப்பன்மை ,உதவி செய்வது, மன்னிப்பு, இரக்கம், சமாதானம், ஒற்றுமை ,மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகும் ,

CATEGORIES
TAGS