BREAKING NEWS

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மாவட்ட இளைஞரணி சார்பில் நூதன வாகன பிரச்சாரம் நடைபெற்றது

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மாவட்ட இளைஞரணி சார்பில் நூதன வாகன பிரச்சாரம் நடைபெற்றது

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மாவட்ட இளைஞரணி சார்பில் நூதன வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

வாக்குப்பதிவிற்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது .

அந்த வகையில் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில் நூதனமான முறையில் வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

பெரிய நீளமான லாரி ஒன்றில் சமையலறை போன்றும் பெட்ரோல் பம்ப் போன்றும் சிலிண்டர் போன்றும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அதில் இந்தியா கூட்டணியின் வாக்குறுதிகளாக பெட்ரோல் விலை 25 ரூபாய் குறைக்கப்படும் என்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பிரச்சார வாகன ஊர்தியை தொடர்ந்து,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையிலான இளைஞரணி தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.

அப்போது,
திமுகவின் மூன்றாண்டு கால சாதனைகளை விளக்கிக் கூறும் வகையிலான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த வாகன பிரச்சார பேரணி பன்னீர்செல்வம் பூங்கா ,பிருந்தா வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று பெரியார் நகரில் நிறைவடைந்தது .

CATEGORIES
TAGS