ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து குமாரபாளையம் அடுத்துள்ள பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் எந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில்
மகளிர் முடிவெடுத்து விட்டால் யாராலும் மாற்ற முடியாது ஆதலால் வெற்றி உறுதி
உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு
மோடிக்கு வேட்டு வைத்தே ஆக வேண்டும் ஏனெனில் அவர் தொடர்ந்து தமிழகத்திற்கு வேட்டுவைத்துக் கொண்டே உள்ளார்
நிஜா புயல் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் 22 குழந்தைகள் நீட் தேர்வில் உயிரிழந்தனர் இவைகளுக்கு வந்து பார்த்தாரா?
தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே வருபவர்தான் மோடி
நாம் வெற்றி பெறுவது உறுதி பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரகாஷ் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்
இந்திய அளவில் வெற்றி கூட்டணி, மோடியை வீட்டிற்கு அனுப்பக்கூடிய கூட்டணி இந்தியா கூட்டணி.