BREAKING NEWS

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் மாநகராட்சியில் ஒன்று கூடியதனால் பரபரப்பு.

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள்  மாநகராட்சியில் ஒன்று கூடியதனால்  பரபரப்பு.

ஈரோடு ஆர்.கே.வி சாலையில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்திருந்த இடத்தில் புதியதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மீண்டும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டி உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒன்று கூடினர்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேலும் மாலை 4 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்திற்கு ஒன்று கூடி மாநகராட்சி ஆணையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர்.

CATEGORIES
TAGS