BREAKING NEWS

உச்சநீதிமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!! டெல்லியில் பரபரப்பு!

உச்சநீதிமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!! டெல்லியில் பரபரப்பு!

உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய அரசியல் சட்டப்பிரிவு கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 28-ந் துவங்கியது. அன்று முதல் 24 ஆயிரம் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புரைகள் வழங்கியுள்ளது .

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

இந்த நிலையில், டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் யூகோ வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியில் இன்று காலை 9.10 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சுப்ரீம் கோர்ட் தீ

தகவல் அறிந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இதையடுத்து, காலை 10.05 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வங்கியின் தரை தளத்தில் உள்ள கரன்சி பெட்டகத்தின் உள் கூரையில் தீ விபத்து ஏற்பட்டதுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )