உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளைச் சிறையினை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளை சிறையினை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா, மாவட்ட கலெக்டர் த.பிரப் சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி சி. சரஸ்வதி, தலைமை குற்றவியல் நடுவர் கே. மோகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி. தீனதயாளன் ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளைச்சிறையில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் சிறையில் உள்ள கைதிகளுக்கு அளித்துவரும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை,சுற்றுப்புறங்கள் உணவு தரமாக உள்ளதா என்பதை சிறை கைதிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் மருத்துவர்கள் வருகைப் பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, காப்பு புத்தகம், பாரா சிறை பதிவேடு, ஆயுத அறை, சமையலறை. சட்ட சேவை மையம் கைதிகளின் நேர்காணல் அறை போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.