உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில் 3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் தட்டுமால் படுகையில் 25-ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் 450-விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக
ரயத்து வாரியாக மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் அரசலாறு முனீஸ்வரர் கோயில் வளாகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமையில்
மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது அப்போது விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் பரமசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் செந்தில்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முற்றிலும் புறக்கணிப்போம் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இப் போராட்டத்தில் அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.