உடல் நிலை மோசமான நிலையில் இருக்கும் டி. ராஜேந்திரன் உடல்நிலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் டி.ராஜேந்தர். பிரபல நாயகனாக சிம்பு-ன் தந்தை ஆசான் எல்லாமே இவர் தான். நேர்த்தியான செண்டிமெண்ட் கதைகளோடு கலாச்சாரம் பேணும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டி .ஆர்.
வக்கீல் படித்திருந்த இவர் சினிமா துறையை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார். திமுக பிரமுகராக இருந்த ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தியாக மருமலர்ச்சி கழகத்தை நிறுவினார். பின்னர் அந்த கட்சியை மீண்டும் திமுகவுடன் இணைத்தார். பின்னர் மீண்டும் கடந்த 2004ல் மீண்டும் திமுகவில் இருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். முன்னதாக 1996 சட்டமன்றத் தேர்தலில் பார்க் டவுன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . அதோடு சிறு சேமிப்புத் திட்டத்தின் துணைத் தலைவராக இருந்துள்ளார்.
தனது இளைய மகன் மற்றும் மகள் இருவரும் திருமணமாகி செட்டி ஆகிவிட்ட நிலையில் தனது மூத்த மகனும் சிஷ்யனுமான சிம்புவுக்கு திருமணம் ஆகாதது குறித்து டி. ஆர் மிகுந்த மனா உளைச்சலில் இருந்தாக தெரிகிறது. அவ்வப்போது இதை முன்னிட்டு கோவில், பூஜை புனஸ்காரம் என தனது மனைவியுடன் ஈடுபட்டு வந்த இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு, திடீர் நெஞ்சு வலி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக தனது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும். மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது மருத்துவமனைக்கு நேரில் சென்று தி.ஆர் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.