BREAKING NEWS

உடுமலையில் புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு மதுரை வீரன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

உடுமலையில்  புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழைமையான  அருள்மிகு  மதுரை வீரன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டு யு.எஸ்.எஸ் காலனியில் புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன்,
ஸ்ரீ பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று மாலை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.

தொடர்ந்து முதல் கால பூஜை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ,அனுக்ஞை,கலசபூஜை,திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி தீபாராதணை நடைப்பெற்றது. இன்று அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜை நாடி சந்தானம் ,ஸபருசாஹீதி, திரவ்யாஹீதி,பூர்ணாஹீதி யாத்ராதனம்,தீபாராதணை கலசம் ,ஆலய வலம் வந்த உடன் உடுமலை ஐயப்பன் கோவில் சிவத்திரு சசிதரகுருக்கள் ,


சுந்திரமூர்த்தி சிவம் ,தலைமையில் திருச்செந்தூர் ,கொடுமுடி ,கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவில் ,திருமூர்த்திமலை ,சபரிமலை,சேத்துமடை தேவி காளியம்மன் கோவில் ஆகிய பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசம் மீது ஊற்றபட்டு மதுரைவீரன் சாமி,பொம்மியம்மாள் ஸ்ரீ வெள்ளையம்மாள் மற்றும் பரிவாரங்கள் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பு வழிபாட்டுடன் நடைப்பெற்றது.பின்னர் புனித நீர் திரளான பக்தர்கள் மீது தெளிக்கபட்டது

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )