உடுமலை அருகே மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்.500 க்கும் மேற்பட்ட விரர்கள் பங்கேற்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி கிராமத்தில்
பி.எம்.டபூல்யூ பிரண்டஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 11ம் ஆண்டு மாநில அளவிலான இரு சக்கர மோட்டார் ரேஸ் பைக் பந்தயம் நடைப்பெற்றது.
ஓப்பன் கிளாஸ்., இந்தியன் கிளாஸ்., இக்ஸ்போர்ட் கிளாஸ், ஸ்போர்ஸ் டோக்கிளாஸ், பெண்கள் பிரிவு,
குழந்தைகள் பிரிவு, இன்டிமெண்ட்கிளாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் நடைப்பெற்ற போட்டிகளில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
புழுதி காட்டில் புழுதி பறக்க இரு சக்கர வாகனங்களை வீரர்கள் போட்டி போட்டிக்கொண்டு மைதானத்தில் சீறி பாய்ந்தனர்.மேலும் குறிப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் மிக வேகமாக அடைந்த வீரர்களுக்கு கோப்பைகளும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.
உடுமலையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் மைதானத்தில் புழுதி பறக்க உறுமிய வாகனங்களை சுற்றுவட்டார கிராம புற பகுதிகளில் இருந்து எராளுமானோர் கண்டு களித்தனர்.