உடையார்பாளையம் அருகே அருள்மிகு அய்யனார்கோவிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அய்யனார் வீரனார் பாப்பாத்தி அம்மன் சப்த கன்னிகள் கோவில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற நான்கு கால வேள்வி பூஜைகள் முடிவற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலைச் சுற்றி வலம் வந்தது இதனையடுத்து அருள்மிகு அய்யனார் சப்த கன்னிகள் வீரனார் கருப்புசாமி பாப்பாத்தி அம்மன் முருகன் விநாயகர் சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரை ஊற்ற பக்த கோடிகளின் அரோகரா கோஷம் ஒலிக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
CATEGORIES அரியலூர்