BREAKING NEWS

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதமாக மழை பெய்யாத நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் நிலவியது. சுமார் 29 டிகிரி வரை வெப்பம் இருந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வந்த நிலையில் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக கோடை மழை பெய்தது.

இதனால் உதகையில் குளுகுளு காலநிலை நிலவியது. உதகை மலர் கண்காட்சிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மழை பெய்த போது மரங்கள் மற்றும் மேடையின் நடுவே நின்று மழையிலிருந்து தற்காத்துக் கொண்டனர்.

தொடர்ந்து நான்கு நாட்களாக உதகையில் பரவலாக மழை பெய்து வருவதால் மலை காய்கறி மற்றும் பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் நீலகிரியில் கடும் வெயில் காரணமாக வறட்சி நிலவிய போது காட்டுத் தீ ஏற்பட்டு வந்த நிலையில் ,தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நான்கு நாட்களாக பல இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வருவதால் காட்டு தீ அபாயம் நீங்கியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS