உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.
உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு.இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கோடை விழாவில் ஒரு பகுதியாக மூன்று நாட்கள் நடைபெறும் நாய்க்கண்காட்சி உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் துவங்கியது.
135வது பிரசித்தி பெற்ற நாய் கண்காட்சி தென்னிந்திய கெனல் கிளப் சார்பில் நடைபெறுகிறது. இந்தாண்டு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 52 வகைகளில் 450 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளது. இதில் நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்,கோம்பை,
ஆகிய ரகங்கள் பங்கேற்றுள்ளன.
இதேபோல் ஜெர்மன் செப்பர்டு, டாபர்மேன், சைபீரியன், அஸ்கி, பீகில் ,பெல்ஜியம் செப்பர்டு போன்ற நாய்கள உட்பட 56 ரகங்களில் 400 ரகங்களில் நாய்கள் பங்கேற்றுள்ளன. நாய்கள் அணிவகுப்பு, அவைகளின் திறமையை குறித்த போட்டிகள், சுயக் கட்டுப்பாடு போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது.
வெற்றி பெறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு கேடயங்கள் மற்றும் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.இறுதிப் போட்டியில் பங்கேற்ற நாய்களில் ஒன்றிற்கு இந்த ஆண்டின் சிறந்த நாய் விருதும் வழங்கப்பட உள்ளது .இந்த கண்காட்சி உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.