BREAKING NEWS

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கும் 126 வது மலர் கண்காட்சிக்காக 2.60 லட்சம் வண்ண ரோஜா மலர்கள், கொய்மலர், சாமந்தி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது, மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 ஆவது மலர் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு இன்று துவங்கிய 10 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான நுழைவு வாயில்கள், 30 அடி உயரத்திற்கு 1லட்சம் ரோஜா மலர்களைக் கொண்டு குழந்தைகளை கவரும் வகையில் பிரம்மாண்டமான டிஸ்னி வேர்ல்ட், 80 ஆயிரம் வண்ண ரோஜா மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த யுனெஸ்கோ அந்தஸ்த்தை குறிக்கும் வகையில் ஊட்டி மலை ரயில், தேனி, முயல், செல்பி ஸ்பாட் போன்ற 2.60 லட்சம் வண்ண ரோஜா மலர்கள் கார்நேஷன் சாமந்தி போன்ற மலர்களை கொண்டு பிரம்மாண்டமான மலர் அலங்காரங்கள் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பம்சமாக மலர் கண்காட்சியின் முதல் நாள் மற்றும் இறுதி நாளில் பிரம்மாண்டமான இரவு நேர LASER LIGHT SHOW நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

மேலும் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் 282 ரகங்களில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் பணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேப்போல் உதகை அரசு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சியும் இன்று துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளதால் ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்டமான நுழைவு வாயில், தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, கழுகு, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகளின் உருவங்களை ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை இன்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் துவங்கிவைத்துப் பார்வையிடுகின்றனர். விழாவில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து நெரிச்சலை கட்டுப்படுத்தவும் கோவை ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS