BREAKING NEWS

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….

உலக புகழ்ப்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவை கடந்த 1848ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த மெக் ஐவர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1848ம் ஆண்டு அவரால் பூங்கா அமைப்பதற்க்கான பணிகள் தொடங்கப்பட்டு, பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்து 1867ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது.

சுமார் 19 வருடங்களாக மெக் ஐவர் அயராது உழைத்து அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவர் கடந்த 1876ம் ஆண்டு ஜீன் மாதம் 8ம் தேதி இயற்கை எய்தினார்.

அவருடைய நினைவு நாளில் ஒவ்வொரு வருடமும் உதகையில் செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் உள்ள அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று அவருடைய 148வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷிப்லாமேரி மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஸ்டீபன் ஆலய பங்கு தந்தை ரெவெரன் ரமேஷ்பாபு சிறப்பு பிராத்தனை நடத்தினார்.

CATEGORIES
TAGS