உதகை அருகே கண் தெரியாத, வயது முதிந்த காட்டெருமை உலா வருவதால் விரட்ட வேண்டும் என கோரிக்கை …
உதகை அருகே லவ்டேல் பகுதியில் யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் கண் தெரியாத, வயது முதிந்த காட்டெருமை ஒன்று சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அடர்ந்த வன பகுதிக்குள் காட்டருமையை விரட்ட வேண்டும் என கோரிக்கை …
மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உதகையை அடுத்த லவ்டேல், கெரடா, கேத்தி பாலடா உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் லவ்டேல் பகுதியில் கண் தெரியாத வயது முதிர்ந்த காட்டெருமை ஒன்று சாலைகளில் யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி உலா வருகிறது.
எனவே வயது முதிர்ந்த காட்டெருமையை கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.