உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த கும்பங்கள் எடுத்து வருதல் அலங்கார பூஜைகள், மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்…
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் திருவிழா இன்று வெகு விமரிச்சையாக நடை பெற்றது. இதில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த கும்பங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் பூர்வாங்கம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாக கலச பூஜைகள், விமான கலச பூஜைகள், விசேஷ ஹோமங்கள் உள்ளிட்ட பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று
காலை 5.00 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, புண்யாஹம், யாகசாலை பூஜை மற்றும் மஹா கும்பாபிஷேகம்
தொடர்ந்து அபிஷேக பூஜைகள் நடைப்பெற்றும், அலங்கார பூஜைகள், மஹா தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முனீஸ்வரரின் அருள் பெற்று சென்றனர் இறுதியாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.