BREAKING NEWS

உதகை நகரில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வளர்ப்பு கால்நடைகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்…

உதகை நகரில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வளர்ப்பு கால்நடைகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்…

கால்நடை உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் அபராதம் விதிப்பு…

சுற்றுலா நகரம் என்று அழைக்கப்படும் உதகை நகருக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை நகரில் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, புளூமவுண்டன், காபி ஹவுஸ் சதுக்கம்உள்ளிட்ட பிரதான சாலைகளில் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளான மாடு குதிரை ஏருமை உள்ளிட்ட கால்நடைகளால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து வாகன ஓட்டிகளும் உள்ளூர் பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் உத்தரவின் பேரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS