BREAKING NEWS

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது.

இந்நிலையில் மதியம் 1 மணி முதல் சாரல் மழை பெய்ய துவங்கியது. இதனை தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் ஆறு போல் ஓடுகிறது.

கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு கடும் குளிரான காலநிலை நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை, மிதமான மழை மற்றும் கனமழை என தொடர்ந்து பெய்து வருகிறது.

கனமழையின் காரணமாக உதகை மற்றும் அது சுற்று வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மலை தோட்ட காய்கறிகள் மற்றும் தேயிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அரசு தாவரவியல் பூங்காவில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையின் காரணமாக மரங்களுக்கு அடியில் தஞ்சம் புகுந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS