உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நல்லூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளர், மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை தலைமையில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஞானசேகர், கிளைச் செயலாளர் தண்டபாணி, பொருளாளர் ஆனந்தன் கிளைக் கழக நிர்வாகிகள் இருசமுத்து , பால்ராஜ், ஏழுமலை, மணிகண்டன், ராஜா, ரஞ்சித் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES கடலூர்