உத்தமபாளையம் தாலுகா உட்பட்ட அம்மா பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான ராமர் கோயில் கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மா பட்டியில் மறவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 200 ஆண்டுகள் பழமையான ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மிகவும் பழமையான கோயிலாக கருதப்படும் இக்கோவிலில் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே வரிசையாக நின்று கும்பத்தை வழிபட்டும் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். பின் நடைப்பெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுனர்.
CATEGORIES தேனி