உத்தமர்கள் போல் நடிப்பவர்கள் எடப்பாடியும்,மோடியும் என பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மகளிர் உரிமைத்தொகையை எந்த கொம்பனாலும் நிறுத்த முடியாது காலந்தோறும் வரும் என கச்சிராயபாளையம் பரப்புரையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பேச்சு
உத்தமர்கள் போல் நடிப்பவர்கள் எடப்பாடியும்,மோடியும் என பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார்
ஆடல் பாடல் நிகழ்ச்சி மூலம் பெருமை தேடிய எம்எல்ஏ,
பாடலுக்கு நடுவில் எம்எல்ஏ வின் படத்தை காட்டி புகழை தேடித்தந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பரப்புரை செய்து வாக்கு சேகரிக்க கடைசி நாளான ஏப்ரல் 17 மாலை 6 மணியோடு முடிகிறது
வருகின்ற வெள்ளிக்கிழமை 19ந்தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், வேட்பாளர்கள் தீவிர பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதன்படி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தே.மலையரசனை ஆதரித்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தீவிர பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார் அப்போது பேசிய அமைச்சர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் எந்த கொம்பனாலும் மகளிர் உரிமைத்தொகையை நிறுத்தமுடியாது காலம் முழுவதும் வரும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை விட்டு செல்லும் போது ஆறு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் கோடி கடனில் விட்டு சென்றார்,கொரானா காலத்தில் நிதி வழங்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின், விலை வாசி உயர்வு இந்த ஜிஎஸ்டி யால் எடப்பாடி ஆட்சி காலத்தில் வந்துது,
மோடி நம்மிடம் ஜிஎஸ்டி வரி பெற்று குஜராத்தில் பட்டேல் சிலை வைத்துள்ளார் அந்த சிலை வைப்பதற்கு 3000 கோடி செலவாம்,மோடி மைதானத்திற்கு 800 கோடி செலவாம் மோடியும் எடப்பாடியும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த பரப்புரையில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ,
கழக பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.