உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம்
உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம் .பத்தாம் நாள் மண்டகபடி விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி மகிழ்ந்த தேவேந்திரகுல வேளாளர் மகா சபை .பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த மங்களநாதர் மங்களேஸ்வரி
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையானது மண்ணுக்கு முன்னே தோன்றிய மங்களநாதர் மங்களீஸ்வரி ஆலயம் எனவும் பாண்டியர்களால் கட்டப்பட்டு இங்குள்ள சுவர்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொரு தூண்களிலும் சிற்பத்தால் பாண்டியர்களின் ரகசியம் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆலயத்தில் உலகத்திலேயே எந்த முருகனுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு முருகப்பெருமானுக்கு முன்பு வெள்ளை யானை இருப்பதே ஆகும் .இந்திரன் மகளான தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமானுக்கு இங்குதான் இந்திரன் சீதனமாக வெள்ளை யானையை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
அதனை கொண்டாடும் விதமாக தேவலோக மரபினரான தேவேந்திர குல வேளாளர் மக்கள் பத்தாம் நாள் விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மண்டகப்படியில் விடிய விடிய அன்னதானம் வழங்கப்படுவது மற்றொருபுரம் பாரம்பரிய கலையான பரதம், மல்லர் கம்பம், மல்லர் கயிறு, சிலம்பம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக 101 தேவேந்திர குல வேளாளர் கிராம மக்களுக்கு பல்வேறு திவ்ய திரவியங்களால் அபிஷேக கோலத்தில் மூலவருடன் பஞ்ச மூர்த்திகள் காட்சியளிப்பார் பின்னர் தேவேந்திரகுல வேளாளர் மகாசபை தலைவர் அழகர்சாமி பாண்டியனுக்கு பரிவட்டம் கட்டி முதலுரிமையும் வழங்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து 101 தேவேந்திர குல வேளாளர் கிராம தலைவர்களுக்கும் பரிவட்டம் ஆனது கட்டப்படுகிறது இதனை அடுத்து மங்களநாதன் மகளேஸ்வரி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அப்போது சங்கு நாதங்கள், மங்கள இசை முழங்க,வழி நெடுகிலும் தீப ஆராதனை காண்பித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.