BREAKING NEWS

உலக சிறுவர்கள் வன்கொடுமைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நடத்தது.

உலக சிறுவர்கள் வன்கொடுமைக்கு எதிரான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நடத்தது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி உலக சிறுவர்கள் வன்கொடுமைக்கு எதிரான நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

 

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் முன்னதாக நேற்றே திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 32 மணவர்களுக்கும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 20 மாணவிகளையும் திருவெறும்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை குற்றங்கள் பற்றியும்,

 

 

அதை தடுப்பதற்கு காவல் துறையினரை அனுகுவது பற்றியும், அவசர அழைப்பு எண் 100, குழந்தைகள் பாதுகாப்பு தள எண் 1098, பெண்கள் பாதுகாப்பு தள எண் 181,கணினி கூற்ற தள எண் 1930ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாணவ மாணவிகளுக்கு திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விரிவாக எடுத்துக் கூறியதோடு,..

 

 

மாணவர்களுக்கு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான நடைபெறும் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டியை நடத்தியதோடு காவல் நிலையத்தில் அன்றாட பணிகள் குறித்தும் காவல் நிலைய வளாகத்தை சுற்றி காண்பித்தும் மாணவ மாணவிகளின் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் இதில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் நோட்டு பேனாக்களையும் வழங்கினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )