உலக செய்திகள்
மாணவிக்கு பாலியல் தொல்லை. தாய் ஆசிட் வீசி கொலை. உயிருக்கு போராடும் தந்தை: இளைஞர்கள் வெறிச் செயல்:
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள், அவரின் தாயாரை ஆசிட் வீசி கொலை செய்துள்ளனர். தந்தை உயிருக்குப் போராடி வருகிறார். இந்த கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, சில இளைஞர்கள், மாணவியின் வீட்டு வாசலில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை மாணவியின் தந்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிக்கு, அந்த இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து, மாணவியின் தந்தை அங்குள்ள அரசியல்வாதிகளை அழைத்து வந்து காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டது.