BREAKING NEWS

உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.

உலக தையல் கலைஞர்கள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் கலைஞர்களின் பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி உலக தையல் கலைஞர்கள் தினம் மற்றும் நவீன தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநில மூன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி தையல் கலைஞர்கள் காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே தையல் கலைஞர்களுக்கு மின்சாரம் மானியம் வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெற்ற தையல் கலைஞர்களுக்கு பல்லாண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.3000 ஓய்வூதியத்தை ரூ.5000 ஆக வழங்க வேண்டும் என கோரிக்கையும், தொகுப்பு வீடு வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நவீன தையல் கலைஞர்கள் சங்கம் மாநில தலைவர் பாபு தலைமையில் 100க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பெரியார் தூண் அருகே பேரணியை துவங்கி ராஜாஜி மார்க்கெட், ரங்கசாமி குளம், கீரை மண்டபம் வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தடைந்தனர்.

பின் தனியார் திருமண மடத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு கூட்டத்தில் தையல் கலைஞர்கள் சங்கம் கொடியை மாநில தலைவர் ஏற்றி வைத்து கூட்டம் நடைபெற்று வருகிறது.

CATEGORIES
TAGS