உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவினை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா 11 நாட்கஞக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை,இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது அதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாளாக வாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
மேலும் நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் திருமலை திருப்பதி ஆஸ்தான விதூஷனி கலைமாமணி பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி கன்னியாகுமரி வயலின் சாய்ரசித் வயலின் தேவிபிரசாத் மிருதங்கம் குழுவினரின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வாராஹி அம்மனை வழிபட்டும் இசை நிகழ்ச்சியை கண்டும் ரசித்தனர்.
