உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் தனியார் பள்ளியில் 14வது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாம் பள்ளி ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் தன்னாலர்வர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்:-

ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச அமைப்புகள் சார்பில் 2004 ஆம் ஆண்டு முதல் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி மயிலாடுதுறை அருகே மேலையூர் கஞ்சா நகரம் பகுதியில் செயல்பட்டு வரும் அழகுஜோதி தனியார் பள்ளி சார்பில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது முகாமை ஓய்வு பெற்ற மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவர் சிவக்குமார் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 40 யூனிட் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு ஏழை நோயாளிகள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.
