ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.
பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் மிகவும் பழமையான, ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு 30-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மன், சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகாலட்சுமி, கருமாரி, சரஸ்வதி, கம்பாநதி, கர்ப்பிணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 9ம் நாள் விழா திருவள்ளூர் மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் நகர மன்ற தலைவரும் கோயில் தர்மகத்தாவுமான பூவை எம்.ஞானம் மற்றும் கழக மருத்துவர் அணி நிர்வாகி ஞா.பிரேம்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா பூவை எம். ஞானம், நிர்மலா ஞானம், முன்னால் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் மற்றும் குடும்பத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான பா. பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது.
பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான இரா. மணிமாறன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி, மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமத், பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மணி, நகர அவை தலைவர் தேவேந்திரன், நகர பொருளாளர் நடராஜன், நகர இனை செயலாளர் ராஜேஸ்வரி, நகர துணை செயலாளர் ரோசி டீச்சர், மாவட்ட பிரதிநிதி மோகன், மாவட்ட பிரதிநிதி லட்சுமி உமாபதி, கழக நிர்வாகிகள் நாராயணன், பரத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் வடசென்னை மாவட்ட கழக செயலாளருமான ஜெயக்குமார், கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பா. வளர்மதி, கழக மருத்துவர் அணி செயலாளர் வேணுகோபால்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பிவி ரமணா,திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன், காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லாப்பாக்கம் ராஜேந்திரன், கழக சிறுபான்மை பிரிவு செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான அப்துல் ரஹீம், கழக அமைப்பு செயலாளர் திருவேற்காடு சீனிவாசன், கழக எம்ஜிஆர் மன்ற தலைவர் சின்னையா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தி.பா. கண்ணன், மாவட்ட துணை செயலாளர் காசு ஜனார்த்தனன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருநாவுக்கரசு, பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகநாதன், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஜி.டி.கௌதமன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வைத்தியநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அந்தமான் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சார்லஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோபிநாத், மாநில மாணவரணி துணை செயலாளர் சல்மான் ஜாவித், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் அபிஷேக் ஜேக்கப், திருமழிசை பேரூர் கழக செயலாளர் ரமேஷ், பூந்தமல்லி நகர வார்டு கழகச் செயலாளர்கள் கலைத்தென்றல், வெற்றி திருமகன், தமிழ்ச்செல்வம், நாகலிங்கம், குணசேகரன், நிசார் அஹமத், விக்னேஷ் பாபு, முகுந்தன், தினேஷ், தினகரன், மகேஷ், கதிர்வேல், சீனிவாசன், ஆனந்த், அப்துல்லாவிஜயன், மோகன்ராஜ், ஜான், பஷீர் அகமத், முகமது அலி, அக்பர், ராஜேஷ், மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் பூந்தமல்லி நகர கழக நிர்வாகிகள் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பிர அணி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்தவிழாவில் பக்தி பாடல்கள்,ஆடல் பாடல், இன்னிசை கச்சேரி, மேளதாளம், நாதஸ்வரம், பறை இசை, சென்டை மேளம், இசைக்கச்சேரி, கரகாட்டம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்…