ஊரப்பாக்கத்தில் சாலை பணியாளர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி.

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்த காரணத்தினால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் தார் சாலைகளில் இருந்து சிறு சிறு கற்கள் வெளியேறியதோடு சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் பயணிப்பதால் சாலை ஓரங்களில் மணல்கள் அதிகமாக படர்ந்துள்ளன.
அதை சரி செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஊரப்பாக்கம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்
சாலைத்துறையின் கீழ் சாலை பணியாளர் பாஞ்சாலி(45) என்ற பெண் பணியில் ஈடுபட்டிருந்த போது அதிவேகமாக வந்த கார் பாஞ்சாலி மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல்துறை
யினருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பாஞ்சாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பச்சை நிற கார் ஒன்றுதான் அந்தப் பெண் பணியாளர் மீது மோதியதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அந்த விபத்துகளை ஏற்படுத்திவிட்டு குற்றவாளிகள் தப்பி விடுவதாகவும் அவர்களை பிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்களை அதிகளவில் பொருத்தப்பட வேண்டும் என போக்குவரத்துக் காவலர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
