ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை விடிய விடிய விரட்டிய வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பிதிர்காடு பகுதியில் இரவு நேரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை விடிய விடிய விரட்டிய வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள். விடியும் வரை போக்கு காட்டுய யானை விடிந்த பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கூடலூரை அடுத்த பிதிர்காடு பகுதியில் ஊருக்குள் ஒரு ஒற்றைக் காட்டு யானை நுழைந்தது உடனடியாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். விறைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர் .
தொடர்ந்து அங்கும் இங்கும் ஆக்ரோசத்துடன் ஓடிய காட்டி யானை விடியும் வரை போக்கு காட்டியது விடிந்த பின்னரே வனப் பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து வனப் பகுதிக்குள் வறட்சி நிலவி வருவதால் குடிநீர் மற்றும் உணவு தேடி யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவதாகவும். வனப் பகுதியை ஒட்டி உள்ள கிராமத்தினர் எச்சரிக்கோடு இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.