BREAKING NEWS

எடப்பாடி அருகே விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைக்க முயன்ற போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

எடப்பாடி அருகே விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைக்க முயன்ற போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் மூன்றாவது நாளான இன்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கல்வடங்கம், கோனேரிபட்டி, பூலாம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் கரைத்து செல்கின்றனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்த 9 பேர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக கல்வடங்கம் அடுத்த கோம்புக்காடு பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு ஆற்றில் சிலையை கரைத்துத்துவிட்டு குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக குரும்பபட்டி, வெண்டனூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் பாரதி (வயது 25) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, பாரதியுடன் வந்தவர்கள் உடனே சங்ககிரி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பாரதியின் சடலத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடி கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து தேவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS