எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாம் பரிசு பெற்ற இளநெஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்
எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி
எட்டாவது பரிசு பெற்ற இளநஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்
இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி கூச்சல் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இளைஞர்கள்
பல கட்ட பயிற்சிக்குப் பின்னரே வெற்றி பெற்றதாக சிவனேஸ்வரன் பேட்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு என்றும் சமத்துவம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது அந்த போட்டியில் வணங்கானேந்தல் இளநெஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் பங்கு பெற்று எட்டாவது ரொக்க பண பரிசும் மற்றும் நினைவு கேடயங்களையும் பெற்றனர் இதை அடுத்து வெற்றி பெற்ற இளைஞர்கள் தங்களது கோப்பையுடன் இரு சக்கர வாகனங்களில் வந்து உற்சாகமாக கூச்சலிட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தினர் முன்னதாக தங்களது குலதெய்வத்தை வழிபாடு செய்தனர் பின்னர் சுழல் கோப்பையை வணங்கினர் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவனேஸ்வரன் பல கட்ட பயிற்சிக்கு பின்பு எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இதை என்னுகிறோம் எனவும் மேலும் போதிய விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் இல்லை எனவும் வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி போதிய விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் வழங்கினால் எங்களது அடுத்த கட்ட வெற்றிக்கும் நகர்வுக்கும் உறுதுணையாக இருக்கும் என தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்