எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
போடிநாயக்கனூரில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் பாலன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ,Ex.MLA லட்சுமணன் நகரச் செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போடி திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட தொகுதியை திமுக தவறவிட்டது. வருகின்ற பாராளுமன்றத்தில் தேனியையும் கைப்பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வெற்றியை நாம் சமர்ப்பிக்க வேண்டும் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் பேசினார் தமிழக சிறப்பு பேச்சாளரும் ஐடி லிங்கில் துணைச் செயலாளர் பாலா பேசுகையில் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் சர்வாதிகார ஆட்சியை அமையும் எனவும் தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் கடந்த 2000 ஆண்டில் ஒரு காருக்கு கூட சொந்தக்காரராக இல்லாத நிலையில் தற்போது 2024 இல் 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருப்பதை எப்படி என தங்க தமிழ்ச்செல்வன் பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார் இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.