ஏழை எளிய மக்களுக்கு நிரந்தர வருமானம் உருவாக்கித் தருவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளார் டிடிவி தினகரன் என அவரது மனைவி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம்
ஏழை எளிய மக்களுக்கு நிரந்தர வருமானம் உருவாக்கித் தருவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளார் டிடிவி தினகரன் என அவரது மனைவி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம்
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் அவர்கள் குக்கர் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார் இதனை அடுத்து அவர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மேலும் அவருக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா தினகரன் தேனி பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் இன்று மாலை ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் கருநாக்க முத்தன்பட்டி குள்ளப்ப கவுண்டன்பட்டி சுருளிப்பட்டி நாராயண தேவன் பட்டி காமிய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்ணன் ஜான் பென்னிகுக் அவர்கள் மணிமண்டபம் அமைந்துள்ள லோயர் கேம்ப் பகுதிக்கு சென்று பென்னிகுக் அவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து லோயர் கேம் பகுதியில் பிரச்சாரமே கொண்டு பின்னர் கூடலூர் நகர பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்
கூடலூர் எம்ஜிஆர் காலனி பகுதியில் அவர் தனது பிரச்சாரத் துவக்கி பேசுகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் அவர்களை குக்கர் சின்னத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்வீர்கள் என தெரியும் ஆனால் அந்த வெற்றி சாதாரணமான வெற்றி அல்லாமல் வானுலாகிய வெற்றியாக அமைய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அவர்கள் வெற்றி பெற்றால் அதை செய்வார் இதை செய்வார் என நான் எதையும் கூற விரும்பவில்லை ஏனென்றால் எனது கணவர் உங்களுக்கு என்ன செய்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியும் அவர் வெற்றி பெற்றால் என்ன செய்வார்கள் என்பதும் நீங்கள் அறிந்த ஒரு விஷயம் என்பதும் நீங்கள் அறிந்த ஒரு விஷயம்.
தேனி மக்கள் அனைவரும் தனது சொந்தம் என அவர் அடிக்கடி கூறுவார் அதன் காரணமாகவே என்னை இந்த பிரச்சாரத்திற்காக தனது சொந்தங்களிடம் சென்று சந்தித்து விட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.அவர் உங்கள் மீது மிகவும் அதிக அளவில் அன்பு வைத்துள்ளார்
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி மாலை அணிவித்து உற்சாகமாக செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்ப்பளித்து வருகின்றனர் மேலும் எம்ஜிஆர் காலனி பகுதியில் ஆண் குழந்தை ஒன்றுக்கு ஜெயச்சந்திரன் என அவர் பெயர் சூட்டினார்.