BREAKING NEWS

ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் பழமைவாய்ந்த மகாலட்சுமியம்மன் கோவில் உள்ளது.

கன்னியப்பிள்ளைபட்டி கொப்பையம்பட்டி கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பனிரெண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்று ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கணபதி ஹோமத்துடன் துவங்கிய கும்பாபிஷேக விழா நான்கு கால வேள்வி பூஜைகள் நடைபெற்று முடிந்து இன்று காலையில் 108 புண்ணிய தளங்களில் இருந்து சேகரித்துக் கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்களில் மீது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதையடுத்து கூடியிருந்த பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் ஐந்து கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS