ஐபிஎல் இறுதி போட்டி நேரம் மாற்றம்!
ஐபிஎல் இறுதி போட்டி நேரம் மாற்றம்!
15-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.
ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் 13 போட்டிகளில் விளையாடி விட்டன. இந்த நிலையில், கடைசி ரவுண்டான 14வது போட்டிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வரை குஜராத்தை தவிர வேறு எந்த அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. லக்னோ, ராஜஸ்தான் 16 புள்ளிகளை பெற்றாலும், 2வது இடத்தை பிடிக்கப் போவது எந்த அணி என்று தெரியவில்லை. இந்த தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் வரும் 29-ம் தேதி 7.30 மணிக்கு தொடங்கும் என்று முன்னரே அறிவிக்கபட்டிருந்து.
இந்நிலையில், இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 29-ந் தேதி இரவு 8 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் ஆட்டத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இறுதிப் போட்டியை கோலகலமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதே நேர மாற்றத்திற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.