BREAKING NEWS

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்… மோப்பநாய், வெடிகுண்டு செயலிழப்பு துறையினர் தீவிர சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அண்ணாமலை நகர் பகுதியில் மித்ர லீலா என்னும் தனியார் குழந்தைகள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது..

திமுகவின் ஒசூர் மாமன்ற உறுப்பினரும், மருத்துவரான ஸ்ரீலட்சுமி என்பவருக்கு சொந்தமான இம்மருத்துவமனை மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் மூலம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் ஸ்ரீலட்சுமி, மருத்துவர் நவீண் ஆகியோர் சிப்காட் போலிசாருக்கு அளித்த தகவலின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலிசார் மின்னஞ்சல் குறித்து விசாரித்து வருகின்றனர்..

இந்தநிலையில் சென்னை, ஹைத்ராபாத், ஒசூர் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 100 குழந்தைகள் மருத்துவமனைக்கு இதுப்போன்ற மிரட்டல் வந்திருப்பது தெரியவந்துள்ளது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்மார், குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்..

போலிசார் மோப்பநாய் பிரிவு, வெடிக்குண்டு செயலிழப்பு துறையினருக்கும் தகவல் அளித்ததை தொடர்ந்து தலைமை காவலர் தலைமையில் 7 பேர்க்கொண்ட வெடிகுண்டு செயலிழப்புதுறையினர் ரோஷி என்கிற மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்டு வருகின்றனர்

Share this…

CATEGORIES
TAGS