ஒசூர் அருகே புகழ்பற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தாசனபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் வெங்கடரமணசுவாமி தேர்திருவிழாவின் இறுதி நாளில் நடைப்பெறும் எருதுவிடும் விழா மிகவும் பிரபலம்
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தாசனபுரம் கிராம எருதுவிடும் விழாவில் கர்நாடகா, ஆந்திரா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான காளை மாடுகளும், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களும் குவிந்திருந்தனர்
சீவிய கூர்மையான கொம்புகளில், அலங்கரிக்கப்பட்ட வண்ண தடுக்கைகள் கட்டியவாறு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் ஆரவாரத்தில் சீறி பாய்ந்து, காளையர்கள் முட்டி தள்ளிய காளைகள் பலரின் கவனத்தை ஈர்த்தது.
நேருக்கு நேராக மின்னல் வேகத்தில் வரும் மாடுகளை அடக்கிய இளைஞர்கள் பரிசாக தடுக்கைகளை கழற்றி சென்றனர்
புகழ்பெற்ற தாசனபுரம் திருவிழாவையொட்டி ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.