ஒசூர் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 சிறுவர்கள் கைது.. 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இருசக்கர வாகனங்களை மீட்டு, குற்றவாளிகளை பிடிக்க ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் அவர்கள் சிப்காட் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தநிலையில்,
மேலும் திருடு போன இருசக்கர வாகனத்தில் வாகனத்தின் உரிமையாளர் ஜி பி ஆர் எஸ் கருவி பொருத்திருப்பதாக தணிப்படை போலீசிடம் தகவல் தெரிவிக்க,ஜி பி ஆர் எஸ் சிக்னலின் உதவியுடன்,
தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத குன்று பகுதியில் ஜிபிஆர்எஸ் சிக்னல் காட்டுவதாக தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதினர் அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் சில நபர்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் அந்த தகவலின் பெயரில் அங்கு சென்று பார்த்ததில் திருடு போன ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தி இருந்த இருசக்கர வாகனம் அப்பகுதியில் இருந்ததை கண்டு இருசக்கர வாகனத்தை, திருடி வந்த நபர்களை கைது செய்து அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த 18 வயது நிறம்பாத மூன்று சிறுவர்கள் விலை உயர்ந்த பல்சர், யமஹா, டியோ வாகனங்களை மட்டுமே திருடி வந்தது தெரியவந்தது 3 பேரை கைது செய்துள்ள போலிசார் அவர்களிடம் பாலக்கோடு மரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.