ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை கண்டித்து, 27 ம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.
பிஏபிவிவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
ஒட்டன்சத்திரம் குடிநீர் குடிநீர் திட்டத்தை கண்டித்து வரும் 27ம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கொடிங்கியம் அர்த்தநாரிபாளையம் உடுக்கம்பாளையம் நல்லூர் தொண்டாமுத்தூர் ஆகிய கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

உடுமலை அருகே உள்ள கரட்டு மடத்தில் நடந்த கூட்டத்தில் கொடிங்கியம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் திருமூர்த்தி திட்டக்குழு முன்னாள் தலைவர் மெடிக்கல் பரமசிவம் உடுக்கம்பாளையம் பரமசிவம் ராகுல் வெற்றிவேல் சிவகுமார் செந்தில் குணசேகரன் நல்லதம்பி உள்ளிட்ட பாசன சங்க தலைவர்கள் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மெடிக்கல் பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறியதாவது ஆழியாற்றிலிருந்து ஒட்டன்சத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வரும் 27ம் தேதி பொள்ளாச்சியில் விவசாயிகள் திரண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பிஏபி பாசனத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் ஒட்டன்சத்திரத்தில் ஏற்கனவே பல திட்டங்கள் உள்ளன காவிரி ஆற்றில் இருந்தும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
