ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி , தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன்
ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும்.
மூன்று குற்றவியல் சட்டங்களை முன்பு இருந்தது போலவே ஆங்கில மொழியில் தர கோரியும், மூன்று குற்றவியல் சட்டங்களையும் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடைமுறைப்படுத்திட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ்பெற கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர் அணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் விநாயகமூர்த்தி, வழக்கறிஞர் அணி தலைவர் பஞ்சமூர்த்தி, வழக்கறிஞர்கள் இளஞ்சேரன் , நாகையன் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் .