ஒரு நிமிடத்தில் தீர்வு கண்ட முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பெண்கள் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்

தென்காசி சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் செல்வ விநாயகர் புறத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கல்லூரணி நியாய விலை கடையில் இருந்து பகுதி நேர நியாய விலை கடை செயல்பட ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து செல்வநாயகபுரத்தில் மூன்று நாட்களும் தாய் கடையான கல்லூரணி கடையில் மூன்று நாட்களும் நியாய விலைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக செல்வ விநாயகபுரம் பகுதி நேர நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்கப்படவில்லை
காரணம் கேட்டால் எடை மெஷின் பழுது என்று காரணம் சொல்லி கடந்த ஒரு வார காலமாக குருசாமிபுரம் செல்வநாயகபுரம் காமராஜ் நகர் பகுதி மக்கள் பொருட்கள் வாங்க வந்துவிட்டு ஏமாந்து சென்றுள்ளார்கள்
இன்றும் கடைக்கு சென்றபோது கடை ஊழியர் மீண்டும் அதே காரணத்தை சொல்லி உள்ளார்
பொருட்கள் கிடைக்காத ஏமாற்றத்தில் பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அவர்களை அணுகி குறையை சொல்லி உள்ளார்கள்
உடனடியாக சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அதிகாரியிடம் பேசி மாற்று மிஷின் ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு நியாய விலை கடையில் வழங்கக்கூடிய பொருட்கள் வழங்கப்பட்டன
கடந்த ஒரு வார காலமாக ஏமாற்றம் அடைந்த பொது மக்கள் இன்று பொருட்கள் கிடைத்தவுடன்
முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்…..