ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியில், ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சிங்கிரிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் வீடு மற்றும் கூரைகளின் மீது கற்களை வீசி வந்துள்ளனர்.
இரவு நேரங்களில் கற்களை வீசும் மர்ம நபர் யார் என்பது குறித்து அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் தேடிப் பார்க்கும் போது அந்த மர்ம நபர் அருகில் உள்ள இருட்டு நிறைந்த காட்டுப் பகுதிக்குள் சென்று மாயமாகி விடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். இதனால் சிங்கிரிபாளையம் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக தூக்கம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் கல் எரியும் சத்தம் கேட்டு சென்று அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர் அப்போது வீடுகளின் மேல் கற்களை வீசிக்கொண்டிருந்த அந்த மர்ம நபரை ஊர் பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர், தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த மர்ம நபர் சிங்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் நிர்மல்ராஜ் என்பது தெரியவந்தது,
தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகளின் மேல் கற்களை வீசி வந்த நிர்மல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் பொதுமக்கள் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட கடத்தூர் காவல் துறையினர் ஒரு வார காலமாக வீடுகளின் மேல் கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிர்மல் ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர், இரவு நேரங்களில் வீடுகளின் மீது கற்களை வீசி அச்சுறுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.