BREAKING NEWS

ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.

ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.

இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது.

நெரோலாக் தொழிற்சங்கம் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த தொழிலாளர் பேரணியில் அசோக் லேலண்ட், பாரா கோட், உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு துவங்கிய இந்த பேரணையானது, ஏரி தெரு மகாத்மா காந்தி சாலை பழைய பெங்களூர் சாலை வழியாக சென்று ராம்நகர் அண்ணா சிலை முன்பு நிறைவடைந்தது.

தொழிலாளர்களுக்காக போராடி உயிர் நீத்த உலக கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் உள்ளிட்டவைகளின் கையில் ஏந்தியப்படியே, தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் முழக்கங்களை கையில் ஏந்தியவாறு தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர்.இதைத்தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கங்களில் பிரதிநிதிகளும் பங்கேற்று மே தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS