ஓசூரில், “நோ வாட்டர்.. நோ வோட்” நோட்டீஸ்கள் வீடுகளில் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பு.
ஓசூரில், “நோ வாட்டர்.. நோ வோட்” நோட்டீஸ்கள் வீடுகளில் ஒட்டி தேர்தல் புறக்கணிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் பாகலூர் சாலையை ஒட்டி அமைந்துள்ள கே சி சி குடியிருப்பு பகுதியில் முறையாக குடிநீர் வழங்காத காரணத்தால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் பொருட்டு “நோ வாட்டர்.. நோ வோட்” என்ற ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீசுகளை வீடுகளில் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர் 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதி தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் விற்பனை செய்து லேஅவுட் பகுதியாக உள்ளது ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பொழுது மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதி இதுவரை தனியாரிடமிருந்து முறையாக மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல நல்லூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான லேஅவுட் பகுதியிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தேர்தல் புறக்கணிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மழைக்காலங்களில் நீர் வெளியேற்றமானது முறையாக கட்டமைக்கப்படாததாலும் மற்றும் கோடை காலங்களில், நிலத்தடி நீர் முழுமையாக வறண்டு போகும் சூழலில் இந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆண்டுதோறும் நிலவும் இந்த பிரச்சனையை இதுவரை தீர்வு ஏற்படுத்த அரசு முன்வருவதே இல்லை எனப் பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் கடந்த நான்கு மாத காலமாக இந்த பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஒவ்வொரு குடியிருப்பு வாசிகளும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பொழுதும் தொடர்ந்து இந்த பகுதி தனியார் கட்டுப்பாட்டில் இருப்பது அளவையே மாநகராட்சி மேம்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டு சுமார் 15க்கும் மேற்பட்ட அப்பகுதி தெருக்களில் உள்ள வீடுகளில் “நோ வாட்டர் ; நோ வோட்” என்று ஆங்கில வாசகங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.